இந்தியா, பிப்ரவரி 10 -- சீமானை கைது செய்வது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்து உள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 1 லட்சத்து 15 ஆயிரத்து 709 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் நான்கு ஆண்டுக்கால ஆட்சியில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை, ஆதரவு அலைதான் வீசுகிறது என்று இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 34 ஆயிரத்து 817 வாக்குகளை பெற்றது. அந்த வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது. அதிமுக தொண்டர்களும் இன்றைக்கு திராவிட இயக்கத்தை நிலைநிறுத்த கூடிய ஆட்சி தலைவர் தளபதினுடைய ஆட்சி என்பதை உணர்ந்து திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். எப்போதும் வேறு யாருக்கும் ஓட்டு போடாத மா...