இந்தியா, பிப்ரவரி 18 -- புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அதில், தமிழ்நாட்டை ஏமாற்றும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது. நாம் தரும் ஒரு ரூபாய் வரி வருவாயில் 29 பைசா கூட நமக்கு வருகிறதா. இது என்ன உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்டால் பொத்துக் கொண்டு வருகிறது. 43 லட்சம் பிள்ளைகள் எதிர்காலம் உள்ளது. அவர்கள் வயிற்றில் ஒன்றிய அரசு அடிக்க வேண்டாம்.

மேலும் படிக்க: Melma SIPCOT Protest: 'மேல்மா சிப்காட் விவகாரம்! நேரடியாக ...