இந்தியா, பிப்ரவரி 3 -- சமூக விரோதச் செயல்களுக்கு திமுக கொடி லைசன்சா? என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் வன்முறை முதல், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் வரை உலகில் உள்ள அனைத்து சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுபட்டு வருபவர்கள் ஆளும் தி.மு.க-வினர் என்பது, அண்மையில் வெளிவரும் செய்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

குற்றவாளிகளின் கூடாரமாகத் திகழும் தி.மு.க-வினர், தங்கள் மீதான களங்கத்தை மறைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழிபோட்டு, நடந்த பிரச்சினையை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது.

டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சமூக விரோதச் செயல்களுக்கு தி.மு.க. கொடி லைசன்ஸ் என்பதை ஒப்புக்கொண்ட போலீஸ், திமுக அரசின் போலீஸ். தி.மு.க. கொட...