இந்தியா, ஜனவரி 29 -- DMK MP's Meeting: முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1.ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட, ஆளுநர்களுக்கு "நடத்தை விதிகள்" உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திடவும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்த வேண்டும்.

2.மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடும் அழுத்தம் கொடுத்து மதுரை அரிட்டாப்ட்டியில் அமையவிருந்த டங...