இந்தியா, பிப்ரவரி 13 -- எதிர்கட்சிகள் அனைவருடைய வாக்கு வங்கியைவிட திமுகவின் வாக்கு வங்கி அதிகமாக உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள்நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் எல்லா குடும்பங்களையும் சென்றடைந்து இருக்கின்றது. பலன் அடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைய ஆட்சி நடைபெறுகிறது. இதனை அண்மையில் வெளிவந்துள்ள INDIA TODAY பத்திரிக்கையுடன் CVOTERS இணைந்து நடத்திய Mode of the nation என்கிற கருத்துக்கணிப்பும் உணர்த்துகின்றது. கருத்துக்கணிப்புகளை நாங்கள் நம்புவது கிடையாது என்றாலும்கூட, அதற்கும் ஒரு வலிமை உண்டு எனப் பார்க்கவேண்டும். சமீபத்திலே INDIA TODAY பத்திரிக்கையு...