இந்தியா, பிப்ரவரி 13 -- அடுத்தாண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர்கள் நியனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டடமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டி பாளையம் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக என்.நல்லசிவம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகி வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படு உள்ளது. பவானி, பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இவ...