இந்தியா, மார்ச் 22 -- தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் வடக்கு மற்றும் தெற்கு இடையேயான போராட்டம் அல்ல; சமமான மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவின் பார்வையை மீட்கும் போராட்டம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.

நான் இங்கு கர்நாடக துணை முதலமைச்சராக மட்டும் நிற்கவில்லை, இந்தியாவின் முன்னேற்றத்தில் எப்போதும் முன்னணியில் நிற்கும் ஒரு மாநிலத்தின் பெருமைமிகு பிரதிநிதியாக நிற்கிறேன். என்னுடன் வர முடியாத எனது முதலமைச்சர் சித்தராமைய்யாவின் அசைக்க முடியாத ஆதரவையும் கொண்டு வந்துள்ளேன். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வர முடியவில்லை என்றாலும், அவரது வாழ்த்துகளும் ஆதரவும் நம்மோடு உள்ளன. நமது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்கும் இந்த வரலாற்றுப் புரட்சியில் அவரது உறுதியும் நம்மோடு உள்ளது.

எல்லை மறுவரையறை அச்சுறுத்தல்: திட்ட...