இந்தியா, ஜனவரி 30 -- Divya Kallachi: கொரோனா காலத்தில் பூம் ஆன டிக்டாக், ரீல்ஸ் மூலம் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் பல பிரபலங்கள் கிடைத்தனர். சிலர் தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்தினர். சிலரோ தங்களின் நடிப்புத் திறமையையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தினர். இன்னும் சிலர், மக்களை சிரிக்க வைக்க செய்வதாக நினைத்து பல கோமாளித்தனமான வேலைகளில் ஈடுபட்டனர்.

இப்படியானவர்கள், கொரோனா சமயத்தில் கிடைத்த ரீச் மூலம் தொடர்ந்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுக்கான நட்பு வட்டத்தை ஏற்படுத்தி கன்டென்ட் கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்த வீடியோக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ரசிக்கக்கூடியவையாக தெரிந்தாலும் நாட்கள் செல்ல செல்ல ஒருவித அலுப்பையும் அவர்களது வார்த்தைகள் வெறுப்பையும் தர ஆரம்பித்தது.

இப்படி, மேலே கூறிய வகையில், தன்னை...