இந்தியா, ஜனவரி 29 -- Divya Kallachi: யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் திவ்யா கள்ளச்சி. கார்த்தி என்பவரை வைத்து இவர் பேசிய வீடியோக்கள் மக்களிடையே கவனம் ஈர்க்க அந்த பிரபலத்தை பயன்படுத்தி யூடியூப் சேனல்களில் பேட்டிக்கொடுத்து வந்தார். அந்தப்பேட்டிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவரது வீடியோக்கள் பலரால் கிண்டல் செய்யப்பட்டாலும், அதனையும் பாசிட்டிவ்வாகக் கொண்டு அடுத்தடுத்த வீடியோ போட்டு பிரபலமாகி அதிக பணம் சம்பாதித்தாக கூறப்படுகிறது.

அண்மையில் திவ்யா கள்ளச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்து வைத்துக்கொண்டு அதனை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என திவ்யா கள்ளச்சி மிரட்டியதாக எழுந்த புகார் பரபரப...