இந்தியா, பிப்ரவரி 10 -- 2023ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இரவு எண்ணூரில், கோரமண்டல் உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு சுற்றுப்புற மக்களுக்கும், கடல்வாழ் மீன்கள், நண்டுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

கசிவு ஏற்பட்ட 2 மணி நேரம் கழித்து கடல்வாழ் மீன்களும், நண்டுகளும் இறக்கத் தொடங்கின.

பெரியகுப்பம், சின்னகுப்பம் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. கோரமண்டல் ஆலையின் பின்பக்க கதவு, தடுப்புசுவர்களுக்கு இடையில் மீன்கள் அதிகம் இறந்து கரை ஒதுங்கின.

ஆலையிலிருந்து கசிந்து வெளிவந்த அமோனியா வாயு கடல்நீருடன் வினைபுரிந்து அமோனியம் ஹைட்ராக்ஸைடாக மாறி pH அளவை அதிகரித்து, முதலில் சிறு, சிறு மீன்களுக்கு சிறிது நேரத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தி (மீன்களின் சுவாச உறுப்பான செவுள்களில் (Gills) பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு விடுதலில் சி...