இந்தியா, பிப்ரவரி 6 -- Director Ram: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான 'பறந்து போ' திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. அப்போது படத்திற்கு ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் பார்வையாளர்கள் கூடியதாகவும், மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் வந்ததாகவும் படக்குழு தெரிவித்து இருக்கிறது

இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கின்றனர்.

படம் குறித்து படக்குழு பேசும் போது, 'நகைச்சுவையை மையமாக கொண்ட எளிமையான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் ...