இந்தியா, பிப்ரவரி 10 -- Director vikraman: இயக்குநர் விக்ரமன் இயக்குநர் மணிவண்ணனுடன் வேலை பார்த்த அனுபவத்தை ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்திருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது, ' நான் மணிவண்ணன் சாருடன் 'குவா குவா வாத்துகள்' படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்து, என்னுடைய திரை பயணத்தை தொடங்கினேன். இதற்கிடையே 'நூறாவது நாள்' படத்திற்கான டிஸ்கஷன் நடந்தது. அதில் என்னையும் இன்னொருவரையும் மட்டும்மே அவர் அனுமதித்தார்.

மணிவண்ணன் சார், காலையில் வருவார் மதியம் சென்று விடுவார். பின்னர் மாலை வருவார்; தொடர்ந்து வீட்டுக்குச் செல்வார். டிஸ்கஷன் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து நான் இயக்குநராக மாறினேன். இதற்கிடையே 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படத்தில் மணிவண்ணன் நடித்திருந்தார். அந்த படத்திற்குப் பிறகு அவர் மிகவும் பிசியான நடிகராக ...