இந்தியா, பிப்ரவரி 7 -- Director Suseendiran: வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இவர் அடுத்தடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, என நல்ல ஹிட் படங்களைக் கொடுத்தார். பின், அவரது படங்கள் சில தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 2கே கிட்ஸ்களின் காதல், உணர்ச்சி, உறவு சிக்கல்களை மையப்படுத்தி 2கே லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் புரொமோஷன்களுக்காக அவர் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், பல விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார்,

அந்தப் பேட்டியில் "நான் வெண்ணிலா கபடிக்குழு படம் முடிச்...