இந்தியா, பிப்ரவரி 7 -- Director Suseendiran: இயக்குநர் சுசீந்திரன், பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள 2கே லவ் ஸ்டோரி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக கலாட்டா யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆதலால் காதல் செய்வீர் படம் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அப்புறம் படம் ரிலீஸ் ஆனா தியேட்டருக்கு போக மாட்டேன். அந்தப் படம் நல்லா ஓடும். மக்கள் அத ஏத்துப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கும். ஆனா, அந்த தைரியம் கொஞ்ச நாள் இல்லாம இருந்தது. இப்போ 2கே லவ் ஸ்டோரி படம் அந்த நம்பிக்கைய எனக்கு தரும். இந்த படம் ஹிட் அடிக்கும். மக்கள் இதை ஏத்துப்பாங்கங்குற நம்பிக்கை எனக்கு வந்திடுச்சு.

என்னோட மன உளைச்சல், உளவியல் பிரச்சனையில இருந்து என்ன வெளிய கூட்டிட்டு வர உதவியது பேனாவும் பேப்பரும் மட்ட...