இந்தியா, பிப்ரவரி 2 -- Director rajakumaran: தமிழ் சினிமாவில் இயக்குநர் விக்ரமனுக்கு எப்படி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறதோ, அதே போல அவரது உதவி இயக்குநராக இருந்த ராஜகுமாரனுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அவர் எடுத்த ஒவ்வொரு படமும் குடும்ப ரசிகர்களை கவரும் வண்ணமாக இருந்தாலும், விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் அவருக்கு சரியாக அமையவில்லை. அதனால், தனக்கு ஏற்பட்ட மன வலிகளை சில மாதங்களுக்கு முன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பார்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் ரெண்டு மூனு நாள் கழிச்சு நான் விக்ரம் சாருக்கு போன் பண்றேன். இது என்னால மறக்கவே முடியல. இத இப்ப சொன்னா நல்லது இல்ல தான். எனக்கு அது கஷ்டமா இருக்கும்.

விக்ரமுக்கு போன் பண்ணும் போது அவங்களோட மனைவி போன் வாங்கி பேச...