இந்தியா, பிப்ரவரி 14 -- அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் புதிய படமான ட்ராகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். நடிகை சிநேகா, இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் மிஷ்கின் சர்ச்சையாக எதுவும் பேசப்போவதில்லை என தெரிவித்தார். அத்துடன் ட்ராகன் படக்குழுவினரை பாராட்டியதோடு, வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பேட் கேர்ள் படத்துக்கு எழுந்துள்ள சர்ச்சையை போக்கி ரிலீஸ் செய்ய திரைத்துறையினர் முன் வர வேண்டும் எனவும் கூறினார்.

ட்ராகன் பட நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, "நான் கெட்ட வார்த்தை எதுவம் பேச...