இந்தியா, பிப்ரவரி 4 -- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் அண்மையில் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் அவர் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே இலக்கு என்பதையும் கூறிவிட்டார்.

அதே போல சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல் வாதியாகவும் தான் மாற இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இவரது இந்த முன்னெடுப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும், விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல டைரக்டரான சேரன் விஜயின் அரசியல் வருகையை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நெட்டிசன் ஒருவர் சேரன் இயக்கத்தில், சோனி ஓடிடி தளத்தில் வெளியான ஜர்னி திரைப்படத்தில், ஆரி ஏற்று நடித்திருந்த பிரணவ் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, படத்தில் அந்த கதா...