இந்தியா, மார்ச் 24 -- Director Bhagyaraj: நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், தன் வித்தியாசமான கதை எழுதும் திறனாலும், மக்களை ஈர்க்கும் பேச்சாலும் மிகவும் பிரபலமானவர். இவர், ராஜபார்வை எனும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, தனக்கு இசையமைப்பாளர் இளையராஜாவுடன் நடந்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில், முந்தானை முடிச்சு படத்தில் இடம்பெற்ற விளக்கு வச்ச நேரத்தில பாடல் உருவான விதம் பற்றி பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

மேலும் படிக்க: பிரிந்து சென்ற ஜோடிகள் என்னால் இணைந்தார்கள் -பாக்யராஜ் பெருமிதம்

அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, "இளையராஜா சாரும், ஜானகி அம்மாவும் பாடிட்டு இருக்காங்க. எனக்கு மட்டும் அந்த பாட்டோட வார்த்தைகள் பிடிக்கல. நல்ல ட்யூன், நல்லா பாடக்கூடிய ஆட்கள் இருந்தும் பாட்டு ஓபன் ஆகும் போது வ...