இந்தியா, ஏப்ரல் 4 -- Director Arun Kumar:2014 ஆம் ஆண்டில் பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் அருண் குமார். பல விருதுகளை வென்று, கவனிக்க வேண்டிய இயக்குநராக தற்போது உருவெடுத்துள்ளார்.

இவர் பண்ணையாரும் பத்மினியும் படத்தை தொடர்ந்து சேதுபதி, சிந்துபாத் மற்றும் சித்தா, போன்ற படங்களை இயக்கினார். இந்த படங்களைத் தாண்டி அவர் சமீபத்தில் இயக்கி வெளியான வீர தீர சூரன் படம் தான் அவரை இதுவரை இல்லாத அளவுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சூராஜ் வெஞ்சாரமூடு மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் வெளியான வீர தீர சூரன்: பாகம் 2 படத்தின் மூலம் அவர் ஒரு வெற்றிப்படத்தை அளித்துள்ளார். இந்த சமயத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸுடன் நடத்திய இந்த பிரத்யேக உரையாடலில், 5 ரூபாய் குறும்பட இயக்குநர் அர...