இந்தியா, மார்ச் 19 -- Dinasari Movie OTT Release: பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கும் தமிழ் திரைப்படம் 'தினசரி' இந்த வாரம் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்த குடும்ப நாடகத் திரைப்படம் டென்ட் கோட் ஓடிடி தளத்தில் விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் விவரங்களை ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: உங்க ட்ரோல் என்னை தொந்தரவு செய்யாது? விமர்சனத்திற்கு பதிலடி தந்த ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் சிந்தியா லூர்தே நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை சிந்தியாவே தயாரித்தும் உள்ளார். ஜி.சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்ததுடன், பாடல் வரிகளையும் எழுதியுள்...