இந்தியா, பிப்ரவரி 2 -- Dil Raju: வெங்கடேஷ்- ஜஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் சங்கராந்தி வஸ்துனானம். இந்தத் திரைப்படம் தெலுங்கில் மெகாஹிட் அடித்தது. படம் வெளியான 18 நாட்களில் 252 கோடி வசூலை எட்டியது.

இந்நிலையில், படக்குழு படத்தின் வெற்றியை கொண்டாட எண்ணி நேற்று ஹைதராபாத்தில் வினியோகஸ்தர்கள் நன்றி கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய வார்த்தைகள் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. அவர் என்ன பேசினார் என்பதைக் காணலாம்.

இந்த விழாவில் தில் ராஜு பேசிய போது,, "சாதாரணமா விநியோகஸ்தர்களுக்கு பிரேக் ஈவன் ஆனா தான் சூப்பர் ஹிட்னு சொல்லுற சூழ்நிலை இருக்கு. அவங்க நஷ்டப்படறப்போ கூட சினிமா சூப்பர் ஹிட் போஸ்டர்கள் வருது. கலாச்சாரம் மாறிடுச்சு. சினிமாத் துறையில 90 சதவீதம் தோ...