இந்தியா, பிப்ரவரி 2 -- நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற 9ம் தேதி வெளியாக இருக்கக்கூடிய திரைப்படம் லால் சலாம். இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அண்மையில் நடந்த லால் சலாம் இசை நிகழ்ச்சியில் படக்குழுவுடன் தன்யா பாலகிருஷ்ணனும் பங்கு பெற்றார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி தொடர்பான அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நெட்டிசன்கள், தன்யா பாலகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் தன்யாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவை ஷேர் செய்து வைரல் ஆக்கினர். இதனையடுத்து பலரும் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் ...