இந்தியா, மே 15 -- Dhanush Divorce Bad Luck: திரைத்துறையில் மிகத்திறமையான நடிகர் தனுஷூடன் பணியாற்றியவர்கள், அடுத்தடுத்து விவாகரத்து பெறுவதும், பிரிந்து செல்வதும் தனுஷூடன் நடித்ததால் உண்டான துரதிர்ஷ்டத்தால் உண்டானது என கோலிவுட்டில் பேச்சு வீசிவருகிறது.

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் 2004ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா,லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷூடன் பணியாற்றிய சில பிரபலங்களும் விவாகரத்துப் பெற்றும், தாம்பத்திய உறவில் இருந்து பிரிந்தும் வாழ்ந்து வருகின்றனர். இதுதான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் ஆகி இருக்கிறது. என்னடா, தனுஷுடன் நடித்தவர்கள் அவருடன் பணியாற்றியவர்கள் என ச...