இந்தியா, பிப்ரவரி 2 -- Dhanush: நடிகர் தனுஷ், தற்போது பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல ரோல்களில் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அதே சமயம், அவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் பயங்கர பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் இயக்கிய திரைப்படங்களும், நடித்த திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸிற்கு தயாராக இருக்க, அடுத்தடுத்து முக்கிய இயக்குநர்களுடனும் கைகோர்த்துள்ளார். இந்த சமயத்தில், தனுஷ் குறித்து சில மாதங்களுக்கு முன் அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேசிய வார்த்தைகள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

கஸ்தூரி ராஜா, டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சினிமா பிரபலமான சித்ரா லக்ட்சுமணனுக்கு பேட்டி அளித்திருப்பார். அந்தப் பேட்டியில், தனுஷை அவர் கடவுளின் குழந்தை என பாராட்டி இருப்பார்.

தொடர்ந்து சித்ரா லட்சுமணன...