இந்தியா, ஏப்ரல் 5 -- Dhanush: கோலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் தங்கள் படத்தில் நடப்பதாகக் கூறி, முன்பணம் வாங்விட்டு தற்போது வரை படப்பிடிப்பிற்கு கால்ஷீட் அளிக்காமல் உள்ளார் எனக் கூறி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பங்குதாரர், கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டு மீண்டும் பஞ்சாயத்தை கிளப்பினார். அதில், ஆர்.கே. செல்வமணியிடம் பல கேள்விகளை கேட்டு இருந்தார். அதற்கு செல்வமணியும் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்தை நடத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெப்சி-யை தாண்டி தமிழ்நாடு தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை தொடங்கிட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இது குறித்தான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சங்க பொறுப்பாளர்கள், 'எங்களுடைய செயலாளரின் பெயரை குறிப்பிட்டு,...