இந்தியா, பிப்ரவரி 1 -- Devi Sri Prasad:நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள தண்டேல் திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முன்னதாக தண்டேல் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அருமையான இசையை வழங்கியுள்ளதாக பலரும் கூறிவரும் நிலையில் தண்டேல் படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க வேண்டாம் என்று தான் நினைத்ததாக அல்லு அரிவிந்த் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

தண்டேல் படத்தின் நாக சைதன்யா, சாய் பல்லவி, இயக்குனர் சந்தூ மொண்டேட்டி, தயாரிப்பாளர் அல்லு அரிவிந்த் ஆகியோர் சமீபத்தில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசினர். அந்தப் பேட்டியில் அல்லு அரிவிந்த் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை வெளிப்படுத்தினார். இந்தப் படத்த...