இந்தியா, ஜனவரி 27 -- கோயம்புத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் உஷா நந்தினி புதுயுகம்டிவிக்கு கொடுத்த நேர்காணலில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பானம் குறித்து கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கழிவு நீக்கம் என்பது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிவிட்டால், உங்கள் உடல் நன்முறையில் செயல்படும். உங்கள் உடலில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் தொடர்ந்து சேர்ந்துகொண்டேயிருக்கும். நாம் உண்ணும் உணவு, பானம் மற்றும் அனைத்தும் நமது உடலில் கழிவை சேர்த்துக்கொண்டு இருக்கும். அதை நாம் முறையாக நீக்கும்போதுதான் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் ஆகியவற்றை நீக்குவது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.

நோய்களில் இருந்து பாதுகாக்கிறது

கழிவு நீக்கம் செய்...