இந்தியா, பிப்ரவரி 14 -- டீடாக்ஸ், உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கினாலே உடலுக்கு வியாதிகள் வராது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த டீடாக்ஸிபிகேஷனை இயற்கை முறையில் செய்வது எப்படி என்று திருச்சியைச் சேர்ந்த இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறுகிறார்.

அவர் கூறுகையில்,

நச்சு நீக்க சிகிச்சை என்பது உடலில் உள்ள எல்லா வகையான கழிவுகளையும் வெளியேற்றும் வழிமுறையாகும். இது ஒரு வார காலம் நீடிக்கும். மாதம் ஒருமுறை இதை செய்ய வேண்டும். இவ்வாறு ஆறு மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள எந்த வகையான நச்சுக்களும் நீங்கிவிடும்.

ஒரு டேபிள் ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் அதிகாலை வெறும் வயிற்றில் பருகி விட்டு இரண்டு டம்ளர் சூடான கருஞ்சீரக கசாயம் பருக வேண்டும். இij பருகிவிட்டு அரை மணி நேரம் நிமிர்ந்த நிலையில் அமர்ந்...