இந்தியா, ஏப்ரல் 2 -- Dentistry: மார்ச் 24 அன்று தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டான டாக்டர் ஷெட்டியில், இரைப்பை மருத்துவரான டாக்டர் சௌரப் ஷெட்டி, பல் துலக்குவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு உதவும் என்பதைப் பகிர்ந்து கொண்டார். அவர், "நீங்கள் படுக்கைக்கு முன் பல் துலக்குகிறீர்களா?" என்று கேட்டார். ''ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால், அதைத் தவிர்த்தால், ஈறுகளில் பாதிப்பு மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும்'' என்றும் டாக்டர் செளரப் ஷெட்டி விளக்கினார்.

மேலும் படிக்க | இதய நோய்: பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்.. விரிவாக விளக்கும் டாக்டர்!

டாக்டர் ஷெட்டி மேலும் கூறுகையில், ''படுக்கைக்கு முன் உங்கள் வாய் சுகாதாரத்தை கடைபிடிக்கிறீர்களா என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்! விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இதை உங்கள் கு...