இந்தியா, பிப்ரவரி 16 -- முதுகெலும்பு உயிரிகளில் காணப்படும் இன்றியமையாத உறுப்புகளில் ஒன்று தான் பல், இது நமது செரிமான மண்டலத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது. சில சமயங்களில் சொத்தை காரணமாக நமது பல்லை இழக்க நேரிடலாம். மேலும் எதிர்பாரா விபத்து காரணமாக சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல் விழுந்து விடலாம் அல்லது அனைத்து பல்லும் விழுந்து விட கூட வாய்ப்பு உள்ளது. பல் இல்லையென்றால் சரியாக சாப்பிட முடியாது. இதில் தொடங்கி சரிவர பேச முடிவதில்லை. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நமக்கு மருத்துவ ரீதியான தீர்வு தான் செயற்கை பல் சிகிச்சை. இந்த சிகிச்சை காரணமாக பல் இல்லாதவர்களுக்கு கூட செயற்கை பல்லை கச்சிதமாக பொருத்தி விட முடியும். இந்த முன்னேற்றத்தால் நமக்கு பல பலன்கள் கிடைக்கின்றன. இது தொடர்பாக ஹச்.டி. லைப்ஸ்டைலுக்கு செயற்கை பல் பொருத்துதலில் எது சிறந்து என்றும...