இந்தியா, பிப்ரவரி 14 -- தமிழில் "பல் போனால் சொல் போச்சு" என்ற ஒரு பழமொழி உள்ளது. அதற்கு ஒருவர் தனது பற்களை இழக்கும் போது அவரது பேச்சு தெளிவு இல்லாமல் இருக்கும் என்பதே அர்த்தம். நமது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆதாரமாக விளங்குவது செரிமான மண்டலம் தான். அத்தகைய செரிமான மண்டலத்தின் தொடக்கமே இந்த பற்கள் தான். உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான பற்களில் ஏதேனும் பாதிப்பு என்றால் நம்மால் இயல்பாக செயல்படவே முடிவதில்லை. அதிலும் பல் சொத்தை போன்ற காரணங்களால் வரும் வலியை நம்மால் தாங்க முடிவதில்லை.

தமிழர்கள் முதன் முதலில் வேப்ப மரக் குச்சி, ஆலமர குச்சி போன்றவற்றை வைத்து பற்களை துளக்கி வந்தனர். இப்போது உப்பு கொண்ட டூத் பேஸ்ட், கரி கொண்ட பேஸ்ட் என புது விதமாக விளம்பரங்கள் வருகின்றன. இருப்பினும் நம் பற்களில் ஏற்படும் பாதிப்பு குறைந்த[பாடில்லை. ...