இந்தியா, மார்ச் 22 -- நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டுக் குழு கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்து உள்ளன.

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர்மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சி மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்களுக...