இந்தியா, மார்ச் 27 -- மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறைக்கு மக்கள் தொகை மட்டுமே அளவுகோலாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி தெலங்கானா சட்டமன்றம் வியாழக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

மாநில சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டால், மக்களவைத் தொகுதிகளில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செய்த தென் மாநிலங்கள் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக் கூடாது. எனவே தொகுதி மறுசீரமைப்பிற்கு மக்கள் தொகை மட்டும் அளவாக இருக்ககூடாது. மக்கள் தொகை அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால் அவை பாதிக்கப்படும் என்று அ...