இந்தியா, பிப்ரவரி 16 -- உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண ரயில்களில் ஏறுவதற்காக சனிக்கிழமை இரவு டெல்லி ரயில் நிலையத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் கூட்டம் கூடியது. இந்த அதிக அளவிலான கூட்டம் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்திலேயே நிரம்பி வழிந்தது. எதிர்பாரா விதமான வந்த இந்த கூட்டத்தினால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டெல்லி விமான நிலையமே கூட்டமும் கூச்சலுமாக இருந்தது. மேலும் இது சிலரின் உயிரையும் பறித்துள்ளது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதனை நேரில் கண்ட மக்கள், ரயில் நிலையத்தில் கட்டவிழ்ந்த கொடூரத்தை குறித்து கூறுகையில், "கூட்ட நெரிசல் உச்சகட்டத்திற்கு வந்து நிலமை மோசமானது பின்னர் தான் மிகவும் தாமதமாக இருந்தபோதுதான் அதிகாரிகளின் உதவி வந்தது என்று கூறி...