இந்தியா, பிப்ரவரி 8 -- டெல்லியில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 42 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 1.55 கோடி வாக்காளர்களை கொண்ட டெல்லியில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மையத்திலும் துணை ராணுவப் படைகளின் இரண்டு கம்பெனிகள் உட்பட 10,000 போலீசாருடன் மூன்று அடுக்கு பாதுகாப...