இந்தியா, பிப்ரவரி 8 -- Delhi Election Results: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து உள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குகளையும் கணிசமாக பிரித்து உள்ளது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக 43 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) வாக்குகளில் கணிசமான பகுதியை காங்கிரஸ் கட்சி பிரித்து உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் இது 6.7% வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்று உள்ளது. ஆம் ஆத்மிக்கு 43.1% வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) 47.9% வாக்குகளும் கிடைத்து உள்ளன.

1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லியில் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இருப்பினும் கடந்த 20...