இந்தியா, பிப்ரவரி 8 -- டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 13 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்று உள்ளது.

டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த தொகுதியில் பின்னடைவை சந்தித்து உள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி உள்ளது. டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தேசிய தலைநகர் முழுவதும் 19 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு இடையே தொடங்கி உள்ளது.

வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், மைக்ரோ பார்வையாளர்கள் மற்றும் இந்த செயல்முறைக்கு பயிற்சி பெற்ற உதவி ஊழியர்கள் உட்பட 5,000 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, முதலில் தபால் வாக்குகள் எண...