இந்தியா, பிப்ரவரி 8 -- டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்து உள்ளார். கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) வாக்குகளில் கணிசமான பகுதியை காங்கிரஸ் கட்சி பிரித்து உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் இது 6.7% வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்று உள்ளது. ஆம் ஆத்மிக்கு 43.1% வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) 47.9% வாக்குகளும் கிடைத்து உள்ளன.

ஆகஸ்ட் 16, 1968 அன்று ஹரியானாவில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய வருவாய் சேவை பணியில் இருந்தவர...