இந்தியா, பிப்ரவரி 8 -- டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி, மணிஷ் சிசோடியா ஆகியோர் சொந்த தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 1.55 கோடி வாக்காளர்களை கொண்ட டெல்லியில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மையத்திலும் துணை ராணுவப் படைகளின் இரண்டு கம்பெனிகள் உட்பட 10,000 போலீசாருடன் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக 41 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 24 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்து வருகிறார். அவருக்கு எதிராக போட்டி...