இந்தியா, பிப்ரவரி 12 -- Deepika Padukone: மனநலம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பரிக்ஷா பே சர்ச்சாவின் சமீபத்திய எபிசோடில், தீபிகா படுகோன் பேசினார். அப்போது அவர் தான் மன அழுத்தத்துடன் போராடிய கதையை பற்றி பேசினார்.

அதில் அவர் பேசும் போது, 'நான் பள்ளியிலிருந்து விளையாட்டுக்கு மாறினேன், பின்னர் மாடலிங், இறுதியில் நடிப்புத்துறையில் தஞ்சம் அடைந்தேன். 2014ம் ஆண்டு என்னுடைய உடல் மயக்கம் அடையும்வரை உழைத்தேன். பின்னர்தான் நான் மன அழுத்தத்துடன் போராடுகிறேன் என்பது தெரிந்தது.

மன அழுத்தம் பற்றிய விஷயம் என்னவென்றால், அது கண்ணுக்கு தெரியாதது; நீங்கள் அதை எப்போதும் பார்க்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் கவலை அல்லது மனச்சோர்வுடன் போராடலாம். ஆனால் நமக்குத் தெரியாது; ஏனென்றால் வெளியில், அவர்கள் மகிழ்ச்சியா...