இந்தியா, ஜனவரி 30 -- தமிழில் டிவி பிரபலமாகவும், சமூக வலைத்தளங்களில் ஏராளமான ஃபலோயர்களை கொண்டவராகவும் இருப்பவர் தர்ஷா குப்தா. ஒரு சில படங்களிலும் தலைகாட்டியுள்ள இவர், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதையடுத்து 21ஆம் நாளில் எவிக்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நடிகை தர்ஷா குப்தா தரிசனம் செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "பிக் பாஸ் நிகழ்ச்சி, தனது புதிய படங்கள் பற்றி பேசியதோடு, விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து பணியாற்ற தயார்" என கூறியுள்ளார்

இதுதொடர்பாக நடிகை தர்ஷா குப்தா கூறியதாவது, "தூத்துக்குடியில் உள்ள பிரத்யங்கரா கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு, பிரத்யங்கர...