இந்தியா, பிப்ரவரி 19 -- தென்னிந்தியாவில் இருப்பவர்களுக்கு வட இந்திய உணவுகள் என்றால் கூடுதல் பிரியம் என்று கூறலாம். ஏனென்றால் வட இந்திய உணவுகள் தென்னிந்திய உணவுகளை ஒத்திருந்தாலும் அது தயாரிக்கும் முறையும் அதில் சுவையும் சற்று மாறுபட்டு இருக்கும். நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளை காட்டிலும் மாறுபட்ட சுவையுடைய உணவுகளை நாம் இயல்பாகவே விரும்புகிறோம். இதற்கு காரணம் நமக்கு வழக்கமான சுவை சலித்து போகி இருக்கலாம். இருப்பினும் வட இந்திய உணவுகளும் தென்னிந்திய உணவுகளும் சுவை மற்றும் அதன் தயாரிப்பு முறைகளில் ஓரளவிற்கு ஒத்த குணங்களையும் கொண்டுள்ளன. இந்த நிலையில் புகழ்பெற்ற பஞ்சாபி உணவான தால் மக்கானி தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிகவும் பிரபலமான உணவாகும். இந்த தால் மக்கானி கருப்பு உளுந்தம் பருப்பில் செய்யப்படுவதால் ...