இந்தியா, ஏப்ரல் 30 -- இந்திய சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சி அடைந்திருக்கிறது. முதன்முதலில் கருப்பு வெள்ளை பிலிம் திரைப்படங்களாக உருவாகி வந்த திரைப்படங்கள் இன்றைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் அபரீத வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ஆனால், முதன் முதலில் சினிமாவிற்கு வித்திட்டவர் தாதா சாகேப் பால்கே என்றே சொல்லலாம்.

1910 முதல் 1940 வரை ஏராளமான திரைப்படங்களை தன் சொந்த செலவில் தயாரித்து இயக்கவும் செய்தார். இவர் இயக்கிய முதல் படத்தின் பெயர் 'அரிச்சந்திரா'. இந்திய மக்களுக்கு முதன்முதலில் சினிமாவை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். சினிமாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் என்பதால் தாதாசாகிப் பால்கே 'இந்திய சினிமாவின் தந்தை' என்ற புகழைப் பெற்றார்.

பிறப்பு

1870 ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ல் பம்பாய் மகாணத்தின் நாசிக் என்னுமிடத்தில...