இந்தியா, பிப்ரவரி 7 -- கால்பந்து விளையாட்டு உலகில் மிக சிறந்த வீரராக போற்றப்படும் போர்ச்சுகல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த இரு நாள்களுக்கு முன் 40 வயதை எட்டினார். தற்போது அவர் சவுதி புரொ லீக் கால்பந்து தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். இதையடுத்து அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் 2026 ஃபிபா உலகக் கோப்பை தொடரில் அவர் போர்ச்சுகல் அணிக்காக விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

ரெனால்டோ தனது கால்பந்து விளையாட்டில் அத்தியாயத்தில் இறுதி கட்டத்தில் உள்ளார். இவரை போலவே ரொனால்டோவின் போட்டியாளராக கருதப்படும் அர்ஜென்டினா வீரரான லியோனல் மெஸ்ஸியும் கடைசி கட்டத்தில் இருந்து வருகிறார். மெஸ்ஸ் தற்போது அமெரிக்காவில் எம்எல்எஸ் (மேஜர் சாக்கர் லீக்) தொடரில் இண்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த இருவரும் தங்களது கால்பந்த...