இந்தியா, மார்ச் 4 -- தென்னிந்தியாவின் பிரதான உணவாக இட்லி மற்றும் தோசை இருந்து வருகிறது. இதில் தோசை பலருக்கு பிடித்த உணவாகும். அதிலும் பல வகையான தோசைகள் உள்ளது. வீட்டிலும், ஹோட்டலிலும் என எங்கு வேண்டுமானாலும் எளிமையாக தோசை கிடைக்கும். சில சமயங்களில் இட்லி அவித்து தாமதமாக சாப்பிட்டால் இட்லி பெரும்பாலும் பாறை போல கடினமாகிவிடும். எனவே பலர் தோசையை விரும்புகின்றனர். ஹோட்டல்களில் கிடைக்கும் தோசை எப்போதும் மொறுமொறுப்பாக இருக்கும். எனவே, நல்ல தோசை கிடைப்பது அதிர்ஷ்டம் அல்ல, அது ஒரு நுட்பம் என்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த நுட்பம் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை.

இதன் காரணமாக பலர் கடைகளில் சென்று சாப்பிட்டால் சுவையாக சாப்பிட முடியும் என நம்புகின்றனர். எல்லா உணவகங்களிலும் சுத்தமான, பாதுகாப்பான உணவுகள் செய்யப்படுவதில்லை. சுவையை கூட்டுவதற்கு வேறு ஏதேன...