இந்தியா, ஏப்ரல் 30 -- பக்கவிளைவு ஏற்படுத்தும் என விமர்சனங்களுக்கு உள்ளான கோவிஷீல்ட் தடுப்பூசி நிறுவனத்திடம் பாஜக கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றதாக சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் "பக்க விளைவுகள்" குறித்த சர்ச்சைக்கு மத்தியில், மக்களுக்கு "கட்டாயமாக" செலுத்தப்பட்ட கோவிட் தடுப்பூசி தயாரிப்பாளரிடமிருந்து பாஜக "கமிஷன்" எடுத்ததாக சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் குறித்து சிவபால் யாதவ் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பாஜக தோல்வியைச் சந்திக்கப் போகிறது. நாட்டில் பாஜகவுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது. இந்தியா கூட்டணிதான் அடுத்த ஆட்சியை அமைக்கப் போகிறது" என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிற...