இந்தியா, மார்ச் 20 -- Corn Recipes - ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது பலருக்கும் நன்மை தரும். சிறுதானியங்கள் அதில் பிரதானமானவை. சோளம் அதில் முக்கியமானவை. சோளத்தில் நார்ச்சத்து, தியாமின், ரைபோஃப்ளேவின், வைட்டமின் பி 6 மற்றும் பிற முக்கிய தாதுக்கள் உள்ளன.

சோளம் ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும்; கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். சோளத்தில் ரொட்டி, உப்புமா, சாலட், சூப், கஞ்சி உள்ளிட்டப் பல்வேறு உணவுகள் உள்ளன.

சோளத்தில் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. சோளத்தில் இருந்து சமைக்கப் பயன்படும் முக்கிய உணவுகள் குறித்துக் காண்போம். அதில் ஒரு பகுதியாக சோளத்தில் செய்யப்படும் சமோசா பற்றி பார்ப்போம்.

சோள மாவு - 1 கப்;

வேகவைத்த பட்டாணி - 1 கப்;

வெங்காயம் - 1 பச்சை மிளகாய்;

கறிவேப்பிலை...