இந்தியா, ஜனவரி 28 -- வாசனைக்காகத்தான் அனைத்து உணவுகளிலும் நாம் மல்லித்தழையை சேர்ப்போம். ஆனால் அதில் எண்ணற்ற நன்மைகள் உண்டு. நாம் உணவில் சேர்க்கும் அதையும் சாப்பிடாமல் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த மல்லித்தழையை வைத்து கொத்தமல்லித்தழை கீரை கடைசல் செய்யலாமா? அதற்கான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்வதற்கு முன் மல்லித்தழையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது - நீரழிவு பாதிப்புக்கான அபாயம் இருந்தால் உங்கள் உணவில் கொத்தமல்லி தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள என்சைம்கள் உடல் ரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவை நிர்வகிப்பதுடன், அதிலுள்ள சர்க்கரை அளவை நீக்குகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நீரழிவு பாதிப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது.

செரிமானத்தை எளிதாக்குகிறது - கொத்தமல்ல...