Hyderabad, பிப்ரவரி 17 -- வீட்டில் பண்டிகையாக இருந்தாலும் சரி, பிறந்த நாள் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி நாமே வீட்டில் இனிப்பு உணவுகளை சமைக்கிறோம். அதிலும் முக்கியமான உணவு என்றால் கேசரி மற்றும் பாயாசம் தான். விருந்து உணவு பட்டியலில் கூட பாயாசம் கட்டாயமாக இடம்பிடிக்கும். இந்த பாயாசத்தில் பல வகைகள் உள்ளன. சேமியா, ரவை, பருப்பு ஆகியவை பொதுவாக செய்யபபடும் பாயாசம் ஆகும். இதில் எந்த பாயாசமாக இருந்தாலும் தித்திப்பாக செய்வது வழக்கம். மேலும் ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் சில நிமிடங்களில் பாயாசம் சமைத்து விடலாம். பாயாசம் வெவ்வேறு பொருட்களுடன் வெவ்வேறு வழிகளில் தயாரிக்கப்படுகிறது. இதை சாப்பிட பலருக்கும் பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் பாயாசம் செய்யும் போது அது மிகவும் இனிப்பாக மாறிவிடும். இனிப்பு கூடிய பாயாசம் சாப்பிடுவது மிகவும் கஷ்டம். இ...