இந்தியா, ஜனவரி 26 -- உண்மையில் நாம் தினமும் உண்ணும் எண்ணெயில் என்ன கலந்துள்ளது? என்பது குறித்து அறிவியல் நிபுணர் ஷோபனா நாராயணன் விளக்குகிறார். இதுகுறித்து சேப்பியன் சயின்ஸ் என்ற யூடியூப் தளத்தில் விளக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது,

ஆரம்ப காலத்தில் எண்ணெய் என்பதை விலங்குகளின் கொழுப்பு அதாவது நெய்யை என்பதில் இருந்து நாம் பயன்படுத்தி வந்தோம். அடுத்த விதைகளில் இருந்து எண்ணெய்களை எடுத்து பயன்படுத்த கற்றுக்கொண்டோம். எண்ணெயை பிரித்தெடுக்க மரச்செக்கு போன்ற கருவிகளை பயன்படுத்தி சிறிய அளவில் எண்ணெய் உற்பத்தி நடைபெற்றது. காலனி ஆதிக்கத்துக்குப்பின்னர் தொழில்சாலைகளில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி நடைபெற்றது.

எண்ணெய் எந்த வித்துக்களில் இருந்து எடுக்கப்படுகிறது என்பது அந்தந்த நாடுகளில் உள்ள சீதோஷ்ண நிலையைப் பொருத்து மாறும். பெரும்பாலும் சூரியகாந்தி பூக்க...